சினிமா செய்திகள்

பகாசூரன் படத்தில் இருந்து 'ஆனந்தம் கூத்தாடும்' பாடல் வெளியீடு

பகாசூரன் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆனந்தம் கூத்தாடும்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. தொடர்ந்து அவர் இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய திரைப்படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இதையடுத்து அடுத்ததாக மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆனந்தம் கூத்தாடும்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 'பகாசூரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#AanandhamKoothadum video song from #Bakasuran Movie..
Enjoy the beautiful visuals and waiting for your comments.. https://t.co/9aY4YLHkUA

lyric by #Snehan & composed by @SamCSmusic@natty_nataraj @mohandreamer @Gtm0789 @Mrtmusicoff @Gmfilmcorporat1 pic.twitter.com/s4OqutpOKs

selvaraghavan (@selvaraghavan) February 10, 2023 ">Also Read:

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...