சினிமா செய்திகள்

மீண்டும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்... மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் பாலா...!

சின்னத்திரை நடிகர் பாலா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நயன்தாரா,பார்த்திபன், நடிகர் ஆதி, அறந்தாங்கி நிஷா போன்ற திரை பிரபலங்களும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

இதேபோல சின்னத்திரை நடிகர் பாலாவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். அரிசி, பருப்பு, உணவு பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தற்போது பள்ளிக்கரணையில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து