சினிமா செய்திகள்

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம்; பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல்

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பாடகி சின்மயி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.

இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்