சினிமா செய்திகள்

படத்தின் நீளத்தை அதிகரிக்க மறுபடியும் படப்பிடிப்பு

‘விக்ரம்’ படத்தின் நீளம் போதாது என்று விஜய் சேதுபதியை வைத்து மறுபடியும் 4 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

திரைக்கு வந்த ஒரு புதிய படம் நீளமாக இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தால், உடனே படத்தின் நீளத்தை குறைப்பார்கள். இதற்கு நேர் மாறாக, விக்ரம் படத்தின் நீளம் போதாது என்று விஜய் சேதுபதியை வைத்து மறுபடியும் 4 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். அந்தக் காட்சிகளை படத்துடன் இணைத்துள்ளார்கள்.