சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

மும்பை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து நேற்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார்.சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினார்கள்.

1. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து அவருக்கு தகவல் கொடுத்தவர் யார்? அவர் எங்கே இருந்தார்?

2. மரணம் கேள்விப்பட்டதும், அவர் சுஷாந்துடைய பாந்த்ரா வீட்டிற்குச் சென்றாரா? இல்லையென்றால், ஏன், எப்போது, எங்கே அவர் உடலைப் பார்த்தார்?

3. ஜூன் 8 அன்று அவர் ஏன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டை விட்டு வெளியேறினார்?

4. ஏதேனும் சண்டைக்குப் பிறகு அவர் நடிகரின் வீட்டை விட்டு வெளியேறினாரா?

6. அந்த நாட்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தாரா? அவர் சுஷாந்துடைய அழைப்புகளையும் செய்திகளையும் புறக்கணித்தாரா? அப்படியானால், ஏன்?

7. சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது குடும்ப உறுப்பினர்களில் யாரையும் அணுக முயற்சித்தாரா?

8. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை பற்றிய விவரங்கள். மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் விவரங்கள்.

9. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்துடன் ரியா சக்ரவர்த்தியின் உறவு என்ன?

10. மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அவர் ஏன் கேட்டார்?

உள்பட பல கேள்விகளை அதிகாரிகள் ரியாவிடம் எழுப்பினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு