சினிமா செய்திகள்

"சூர்யா 45" படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த ஆர்.ஜே பாலாஜி

நடிகர் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐதராபாத்,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் துவங்கியது. ஆனால், சென்னை வண்டலூரிலுள்ள வெளிச்சம் கிராமத்தில் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக படப்பிடிப்பு கிரேன்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் நிரம்பியிருந்ததால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் தற்காலிகமாக 'சூர்யா 45' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஐதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 'சூர்யா 45' படப்பிடிப்பு துவங்கியுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram