படங்களை தேர்வு செய்து நடிக்கும் கதாநாயகிகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரவுடி பேபி என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். படத்தில் அவர் ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடிக்கிறார். ஒரு உயிரை காப்பாற்றும் உன்னதமான கதாபாத் திரத்தில் வருகிறார்.
அவருடன் சத்யராஜ், ராம்கி, மீனா, சோனியா அகர்வால், ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எம்.ராஜா சரவணன் டைரக்டு செய் கிறார்.
படத்தைப் பற்றி டைரக்டர் ராஜா சரவணன் கூறும்போது, தாய்மைக்கு எல்லை ஏது, தாயாய் மாறும்போது... என்ற கருத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.