மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஏற்கனவே தமிழில் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் தான வீரா சூர கர்ணா ஆகிய படங்கள் வந்துள்ளன. இப்போது மகாவீர் கர்ணா என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். விமல் இயக்குகிறார்.