சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் வகை திரைப்படமாக உருவாகியுள்ள 'ருத்ரன்' படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கையில் ஆயுதத்துடன் ஒருவரை அடித்து ஆக்ரோஷமான பார்வையுடன் பிரம்மாண்டமான ராட்டினத்திற்கு முன்னால் நிற்பது போன்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்மசை ஒட்டி 'ருத்ரன்' திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 'ருத்ரன்' படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' மற்றும் பி வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடிக்கிறார். 'அதிகாரம்' படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து