சினிமா செய்திகள்

மது போதையில் கார் ஓட்டியதாக பரவும் வதந்தி... டி.வி. நடிகை மதுமிதா விளக்கம்

தனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

'எதிர்நீச்சல்' டி.வி. தொடரில் நடித்து பிரபலமான நடிகை மதுமிதா, தனது காரில் சோழிங்கநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரவிக்குமார் என்பவரது மோட்டார் சைக்கிள் மீது அவரது கார் மோதியது. இதில் காயமடைந்த ரவிக்குமார், சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இவர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே மதுமிதா மது போதையில் வாகனம் ஓட்டியதாக தகவல்கள் பரவின. இது குறித்து நடிகை மதுமிதா தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதியதாகவும், அந்த போலீஸ்காரருக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

அதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது. ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான். அந்த போலீஸ்காரர் தற்போது நலமுடன் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். எனவே போலியான செய்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை