சினிமா செய்திகள்

களரி கற்கும் “ரன் பேபி ரன்” பட நடிகை

நடிகை இஷா தல்வார், விரைவில் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார்.

தினத்தந்தி

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார், கடந்த 2012ல் தேசிய விருது வென்ற தட்டத்தின் மறயத்து என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். தமிழில் பத்ரி இயக்கிய தில்லு முல்லு, மித்ரன் ஜவஹர் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை, ஆர்ஜே.பாலாஜி நடித்த ரன் பேபி ரன் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் இவர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார். களரியைக் கற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் இக்கலையை கற்கும் மாணவர்களுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், களரி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு