சினிமா செய்திகள்

பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி

பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy

தினத்தந்தி

சென்னை

தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் பிரபல இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி மீது வழக்கும் தொடரப்பட்டது. தற்போது அவரது கதை சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவரே நாயகியாக நடிக்கிறார்.

சில காலம் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி மீண்டும் தனது பாலியல் புகார் படலத்தை ஆரம்பித்துள்ளார். இம்முறை அவர் சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பற்றி அவர் பேஸ்புக்கில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்களை இதுவரை நேரடியாக பெயர் குறிப்பிட்டு தாக்கி வந்த ஸ்ரீரெட்டி, சச்சின் விவகாரத்தில் மட்டும் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, இப்பதிவில் தன்னைப் பற்றி அவர் கூறாமல் மற்றொரு நடிகை பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "சச்சின்தெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஐதராபாத் வந்த போது, "சார்மி'ங்" ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை" எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை. ஆனால், கிரிக்கெட் கடவுள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் சச்சின் மீது ஸ்ரீரெட்டி இப்படி புகார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்