சினிமா செய்திகள்

ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கும் சாய்பல்லவி நெகிழ்ச்சி

3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

தினத்தந்தி

ராமாயணம் கதையை மையமாக வைத்து ஏற்கனவே ஸ்ரீ ராமராஜ்ஜியம், ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இந்தப்படத்தை நித்திஷ் திவாரி டைரக்டு செய்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

சீதையாக நடிப்பது குறித்து சாய்பல்லவி நெகிழ்ச்சியோடு கூறும்போது, "இயக்குனர் நித்திஷ் திவாரி எனக்குள் சீதையை எப்படி பார்த்தார் என்ற உணர்வு மகிழ்ச்சியை தருகிறது. இது நிஜமாகவே அரிதாகக் கிடைக்கும் அதிர்ஷ்டம். படப்பிடிப்புக்கு எப்போது அழைப்பார்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இது ஒரு சவாலான வேடம். புகழ்பெற்ற நடிகைகள் நடித்த கதாபாத்திரம் இது. அவர்கள் நடித்ததில் 10 சதவீதம் நடித்தாலும் நன்றாக செய்த மாதிரிதான். விரைவில் கதையை கேட்க மும்பை செல்கிறேன். ஏற்கனவே இந்திய சினிமாவில் பல ராமாயண படங்கள் வந்துள்ளன. ஆனால் வால்மீகி ராமாயணத்தை யாரும் பரிபூரணமாக காட்டவில்லை. இந்தப்படம் அந்த குறையை தீர்க்கும்''என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்