சினிமா செய்திகள்

மெல்போர்ன் இந்திய பட விழாவில் சமந்தா

நடிகை சமந்தா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

தினத்தந்தி

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலால் இந்த விழாவை நடத்தவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ந் தேதி நேரடியாக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவை நடத்த உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமந்தா கூறும்போது, ''மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நேரடியாக பங்கேற்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்திய சினிமாவை பன்முகத் தன்மையோடு கொண்டாடுவது சிறப்பான விஷயம் ஆகும்" என்றார். மெல்போன் இந்திய திரைப்பட விழாக்குழுவினர் கூறும்போது, ''ஆஸ்திரேலியாவில் சமந்தாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சமந்தா பங்கேற்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்" என்றனர். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களில் நடிக்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது