சினிமா செய்திகள்

'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய சமந்தா - வைரலாகும் வீடியோ..!

பீஸ்ட் திரைப்படத்தின் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் அரபிக் குத்து என்ற பாடல் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இணைந்து பாடியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது 'அரபிக் குத்து' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்