சினிமா செய்திகள்

சமந்தா படம் இந்தியில் ரீமேக்

சமந்தா படம் இந்தியில் ரீமேக்.

தினத்தந்தி

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தி மொழியில் ரீமேக் செய்கின்றனர். மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆக உள்ளன. இந்த வரிசையில் சமந்தா நடித்துள்ள யூ டர்ன்' படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்தது. படத்தில் சமந்தாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இந்தி ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான பேமிலி மேன்-2 வெப் தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் மேலும் புதிய வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை