சினிமா செய்திகள்

சமந்தாவின் வலைத்தள பக்கம் முடக்கமா?

நடிகை சமந்தாவின் மேனேஜர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு விளக்கம் தெரிவித்தார். தொழில்நுட்ப பழுது சரி செய்யப்பட்டு சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தினத்தந்தி

நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடவும் செய்கின்றனர். சமூக. அரசியல் கருத்துகளையும் பதிவிடுகிறார்கள். இவற்றை மர்ம நபர்கள் ஊடுருவி முடக்குவதும் நடக்கிறது. நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சில வணிக பொருட்களை விளம்பரம் செய்தும் வருமானம் பார்த்தார்.

இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரின் புகைப்படம் வெளியானது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை விஷமிகள் முடக்கிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. சமந்தாவின் மேலாளர், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரின் புகைப்படம் பதிவேற்றப்பட்டு உள்ளது என்றும், அதை சரிசெய்யும் முயற்சிகள் நடக்கின்றன என்றும் பதிவு வெளியிட்டார்.

தற்போது தனது மேலாளரின் பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா மறுபகிர்வு செய்து கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை