சினிமா செய்திகள்

தனக்கான கதையை ராஷ்மிகாவுக்கு பரிந்துரைத்த சமந்தா

‘தி கேர்ள் பிரண்ட்' படத்தில் ராஷ்மிகா மந்தனா முதலில் இல்லை என்று, படத்தின் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் கூறியிருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

கன்னட மொழியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் உச்சம் பெற்றார். பின்னர் தமிழ் மொழியிலும் நடித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். இவர் நடிப்பில் தி கேர்ள் பிரண்ட்' என்ற திரைப்படம் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முதலில் இல்லை என்று, படத்தின் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "நான் ஒரு கதையை எழுதும்பொழுது, அதை என் நண்பர்களான வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜீத் ஆகியோரிடம் படித்துக் காட்டுவேன். அப்படித்தான் தி கேர்ள் பிரண்ட்' கதையை சமந்தாவிடம் படிக்கக் கொடுத்தேன். இந்த கதையில் சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் முழு கதையையும் படித்து முடித்த சமந்தா, இந்தப் படம் எனக்கு சரியாக இருக்காது. ராஷ்மிகாவிடம் கூறுங்கள்' என்றார். அதனால் அந்தக் கதையை ராஷ்மிகாவுக்கு அனுப்பினேன். அதைப் படித்த அவர் இரண்டு நாள் கழித்து எப்போது ஷூட்டிங் போகலாம்' என்று கேட்டார். அப்படித்தான் ராஷ்மிகா இந்தக் கதைக்குள் வந்தார்" என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இதற்கு முன்பு, சி லா சோ', மன்மதடு 2' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் சி லா சோ' திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றது. இயக்குனர் ராகுல் ரவீந்திரன், பாடகி சின்மயி கணவர் என்பதும் கூடுதல் தகவல்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்