சினிமா செய்திகள்

சமந்தாவின் நடிப்பு அனுபவம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்கிறார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

திரையில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நாங்கள் நடிக்கிறோம். அதை பார்த்து உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் எங்களுக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சினிமா வேறு. வாழ்க்கை என்பது வேறு. சாதாரண மனுஷியாக எனக்கு கூட சில எல்லைகள் இருக்கிறது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்து விட்டேன். இப்போது தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறேன். நானும் மனுஷிதான். எல்லோரையும் மாதிரி நானும் தவறுகள் செய்வேன். நடிகையாக அடுத்தவர்கள் கோணத்தில் என்னை நான் பார்த்துக்கொண்டு இருப்பேன். நடிகை என்பதால் மற்றவர்கள் வாழ்க்கையில் கூட நாங்களே வாழ்ந்து காட்டி விடுகிறோம்.

ஒரு கதாநாயகியின் கதாபாத்திரத்தை வைத்து நம்மிடம் என்ன குறை இருக்கிறது. நாம் எதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.''

இவ்வாறு சமந்தா கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்