சென்னை,
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக நடிகைகள் அணியும் ஆடைகள், கைப்பை, நகைகள், வாட்ச், செருப்பு போன்றவற்றை வலைத்தளத்தில் தேடுவதிலும், அவற்றின் விலையை அறிந்து கொள்வதிலும் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சமந்தா விலை உயர்ந்த வாட்ச் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. அந்த வாட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் விலையை பார்த்து இன்னும் ஆச்சரியப்பட்டு போனார்கள். சமந்தா அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை ரூ.70 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தொடர்ந்து மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
View this post on Instagram