சினிமா செய்திகள்

சமந்தா நடித்துள்ள 'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்காக சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனக்காக டப்பிங் பேசியிருக்கிறார்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் சமந்தாவிற்கு வரும் இன்னல்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள 'யசோதா' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'யசோதா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது