சினிமா செய்திகள்

இரு மொழி படத்தில் நடிக்கும் சமுத்திரகனி- வைரலாகும் போஸ்டர்

நடிகர் தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தினத்தந்தி

தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் திரைப்படம் 'ராமம் ராகவம்'. தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , பிருத்வி போலவரபு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி மற்றும் தன்ராஜ் கொரனானி இடம்பிடித்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை