மும்பை,
இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கொரோனா தொற்றினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பி உள்ள நிலையில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் திடீர் உடல் நலக்குறைவினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சஞ்சய்தத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இந்த நிலையில் சஞ்சய்தத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதற்கு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள சஞ்சய்தத், நான் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறேன். எனக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் நன்றாக கவனித்து கொள்கிறார்கள். ஓரிரு நாட்களில் விடு திரும்பி விடுவேன் என்று கூறியுள்ளார்.