சினிமா செய்திகள்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படத்தில், சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது