மும்பை,
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலி கான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து இருக்கிறார். இவரது மர்டர் முபாரக் மற்றும் ஏ வதன் மேரே வதன் படங்கள் அடுத்தடுத்து இந்த மாதம் வெளியாகின.
இந்நிலையில், சாரா அலிகான் நேற்று மும்பையின் ஜுகுவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கனிவுடன் கேட்டுக் கொண்டார். பின்னர் கோவிலின் வெளியே அமர்ந்து இருந்தவர்களுக்கு இனிப்பு பெட்டிகளை வழங்கினார். இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.
இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகின. இதனை கண்ட ரசிகர்களில் ஒருவர், 'மிகவும் அன்பான இதயம்' என்றும், மற்றொருவர், 'பதிவை நிறுத்துமாறு கூறுவது மிகவும் உண்மையான செயல்' என்றும் வேறொருவர், 'இது மிகவும் அழகான செயல்' என்றும் கருத்து தெரிவித்தனர்.