சினிமா செய்திகள்

லாரன்சுக்கு வில்லனாக நடிக்கும் சரத்குமார்

`ருத்ரன்' படத்தில் லாரன்சுக்கு வில்லனாக சரத்குமார் நடிக்கிறார்.

தினத்தந்தி

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் `ருத்ரன்'. இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கின்றனர். காஞ்சனா படம் வெளியாகி 10 வருடங்களுக்கு பிறகு லாரன்சும் சரத்குமாரும் இணைந்து நடிக்கின்றனர். சரத்குமார் வில்லனாக வருகிறார். கதிரேசன் இயக்கி டைரக்டு செய்கிறார்.

இந்தப் படத்துக்காக சென்னை அருகே வண்டலூரில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்ட கால பைரவர் கோவில் போன்ற பிரமாண்ட அரங்கில் ராகவா லாரன்ஸ், சரத்குமார் இடையே நடக்கும் சண்டை காட்சி 15 நாட்கள் படமாக்கப்பட்டு உள்ளது. படத்தின் இறுதிக் காட்சியாக அமையும் இந்த சண்டைக் காட்சியில் லாரன்சும் சரத்குமாரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர் என்றும், இந்த சண்டை காட்சி அனைத்து தரப்பினரையும் கவரும் என்றும் கதிரேசன் தெரிவித்தார். ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகிறது. தீமையை நன்மை எப்படி வெல்கிறது என்பதுதான் படத்தின் கரு என்றார். இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப் பதிவு: ஆர்.டி.ராஜசேகர், கதை, திரைக்கதை: கே.பி.திருமாறன்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்