சினிமா செய்திகள்

'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' - வெளியானது சந்தானம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

நடிகர் சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார்.

'கிக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' என்ற பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி வெளியான இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இந்த பாடலின் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை