சினிமா செய்திகள்

கதை எழுதும் பிசியில் செல்வராகவன் - வைரலாகும் டுவீட்

இயக்குனர் செல்வராகவன் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்,

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், செல்வராகவன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு