சினிமா செய்திகள்

மீண்டும் சீரியஸ் வேடம்: அரசியல் கதையில் வடிவேல்

மாரி செல்வராஜ் இயக்கும் இன்னொரு படத்திலும் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

தினத்தந்தி

இதுவரை நகைச்சுவை வேடங்களில் வந்த வடிவேலுவை முதல் தடவையாக இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதியின் மாமன்னன் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இன்னொரு பரிமாணத்தில் காட்டினார். இந்த படம் வெற்றி பெற்றதோடு வடிவேலுவின் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.

இதையடுத்து வடிவேலுக்கு தொடர்ந்து அதே மாதிரியான வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. நகைச்சுவை வேடங்களில் நடிக்க இயக்குனர்கள் யாரும் அணுகவில்லை. தனக்கு வரும் கதைகளை கவனமாக கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படமொன்றிலும் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் மாமன்னன் படம் போன்று அரசியல் கதை என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கும் இன்னொரு படத்திலும் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு தற்போது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு