சினிமா செய்திகள்

“ஹால்” திரைப்படத்தில் மாட்டிறைச்சி காட்சியை நீக்க தணிக்கை வாரியம் அறிவுறுத்தல்

தணிக்கை வாரிய உத்தரவை எதிர்த்து ‘ஹால்’ படக்குழுவினர் கேரள ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.

தினத்தந்தி

அறிமுக இயக்குநர் வீர் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ஹால். இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை பெறுவதற்காக, படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். .

இந்த நிலையில், ஹால் படத்தில் இருந்து மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சி மற்றும் சில வசனங்களை நீக்க வேண்டுமென மத்திய தணிக்கை வாரியத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், ஹால் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தக் காட்சி மற்றும் வசனத்தை நீக்கினால் படத்தின் கதையை அது மாற்றக்கூடும் எனக் கருதும், படக்குழுவினர், தணிக்கை வாரிய அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர். முன்னதாக, ஹால் திரைப்படம், மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 12 ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு