சினிமா செய்திகள்

சாந்தனுவின் “மெஜந்தா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பரத் மோகன் இயக்கும் ‘மெஜந்தா’ படத்தில் சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தினத்தந்தி

சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நடிக்கும் படம் மெஜந்தா. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.

இப்படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெஜந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் எங்கள் அடுத்த படமான மெஜந்தாவின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த நிறத்திற்குப் பின்னால் அவள் ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இருக்கிறது. விரைவில் டீசர் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து