லாஸ் ஏஞ்சல்ஸ்,
சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார்.
ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், மிகச்சிறந்த படத்துக்கான விருதை தி ஷேப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் தட்டிச்சென்றது.
முன்னதாக விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த ஆண்டு மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அண்மையில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், மற்றொரு மறைந்த நடிகர் ஷசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.