சினிமா செய்திகள்

169-வது படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் கன்னட நடிகர்

தினத்தந்தி

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது ரஜினிக்கு 169-வது படம். கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும், நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அணுகினர். இயக்குனர் நெல்சன் பெங்களூரு சென்று சிவ ராஜ்குமாரை சந்தித்து கதாபாத்திரம் குறித்து விளக்கினார்.

இந்த நிலையில் தற்போது ரஜினி படத்தில் நடிக்க இருப்பதை சிவராஜ்குமார் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, "கதை, கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியுடன் நடிப்பதை எல்லோருமே சிறந்த வாய்ப்பாகவே கருதுவார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சிறுவயதில் இருந்தே ரஜினி என்னை அறிவார். ரஜினியும், நானும் திரையில் ஒன்றாக நடிப்பதை ரசிகர்களும் விரும்புவார்கள். ரஜினியுடன் நான் நடிக்கும் காட்சிகள் பெங்களூரு அல்லது மைசூரில் படமாக்கப்படும்'' என்றார்.

ரஜினிக்கு சிவராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை