சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர்

படத்தின் நடனக் காட்சியை ஒத்திகையின்போது நடிகை ஸ்ரத்தா கபூர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ஸ்ட்ரீ 2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.

புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ஈதா. இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு நடக ஒத்திகை செய்து பார்த்தபோது ஷ்ரத்தா கபூரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நடனத்தின்போது இடதுகால் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை இரண்டு வாரத்திற்கு இயக்குநர் உடேகர் நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் முக்கிய காட்சிகளை எடுத்துவிடலாம் என ஷ்ரத்தா கூறியதாக தெரிகிறது. இச்செய்தி ஸ்ரத்தா கபூர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை ஷரத்தா கபூரின் சகோதரரான சித்தான்த் கபூர், சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பிரபல தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய போதை விருந்துகள் குறித்த விசாரணையில் இவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகை ஷரத்தா கபூர் தமிழில் கால் பதிக்க தயாராகி உள்ளதாக தெரிகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

View this post on Instagram

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு