கோப்புப் படம் 
சினிமா செய்திகள்

அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜனவரி 2-ந்தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு