சென்னை,
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அஜித் நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராக இருப்பதாகவும், இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, நீளமான தாடி, கோட் சூட் என வித்தியாசமான லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து அஜித்தின் லுக்கின் நெகட்டிவ் புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் எ.கே.61 படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் எச். வினோத் இயக்கும் இப்படத்தை திபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.