சினிமா செய்திகள்

இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு வீடியோ: சூர்யா படக்குழு சட்ட நடவடிக்கை

இணையத்தில் மேலும் இதுபோன்று வீடியோ புகைப்படங்களை பகிரவேண்டாம். மீறி செய்தால் காப்புரிமையின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சூர்யா படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவுக்கு 42-வது படம். நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். 3டி தொழில் நுட்பத்தில் தயாராகிறது.

இதில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சரித்திர கதையம்சத்தில் உருவாகிறது. போர் வீரனாக இருக்கும் சூர்யாவின் தோற்றம் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணைய தளங்களில் வெளியிடுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சூர்யாவின் 42-வது படத்தின் படப்பிடிப்பு தளங்களில் இருந்து சிலர் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த படத்தை பிரமாண்டமான முறையில் திரையரங்க அனுபவமாக கொடுக்க விரும்புகிறோம். ஒவ்வொரு வேலையும் ரத்தமும், வியர்வையும் உள்ளடக்கியது. எனவே பகிரப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்களை நீக்கினால் உதவியாக இருக்கும்.

மேலும் இதுபோன்று வீடியோ புகைப்படங்களை பகிரவேண்டாம். மீறி செய்தால் காப்புரிமையின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு