பொதுவாக மும்பை நடிகை என்றாலே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார்கள். உங்கள் படத்தில் ஸ்ரேயா எப்படி? என்ற கேள்விக்கு டைரக்டர் மாதேஷ் பதில் அளித்தார். மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன். உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை.
சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், செட்டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார் என்றார் மாதேஷ்.