சினிமா செய்திகள்

அச்சச்சோ...! வீடியோ எடுத்தபோது வழுக்கி விழுந்த ஸ்ரேயா

வீடியோ ஒன்றை எடுத்து கொண்டே நடிகை ஸ்ரேயா பேசிய போது, திடீர் என கீழே வழுக்கி விழுந்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த ஸ்ரேயா சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடனும் ஜோடி நடித்தார்.

2018-ல் ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆண்ட்ரீ கோச்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு கொரோனா லாக் டவுன் சமயத்தில் தான் குழந்தை பெற்றதாகவும், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது என, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்துள்ள இவர், அவ்வப்போது குடும்பத்தினருடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

அப்படி வீடியோ ஒன்றை எடுத்து கொண்டே... இவர் பேசிய போது, திடீர் என கீழே வழுக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்