சினிமா செய்திகள்

விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்க மாதேஷ் டைரக்‌ஷனில் ‘சண்டக்காரி தி பாஸ்’

திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி கேரளாவில் வெற்றி பெற்ற மலையாள படம், ‘மை பாஸ்.’ இந்த படத்தை ‘சண்டக்காரி தி பாஸ்’ என்ற பெயரில், தமிழில் தயாரிக்கிறார்கள்.

விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். திரைக்கதை அமைத்து டைரக்டு செய்பவர், ஆர்.மாதேஷ். இவர், விஜய் நடித்த மதுர, பிரசாந்த் நடித்த சாக்லட், விஜயகாந்த் நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:-

வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட நகைச்சுவை படம், இது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாகி வருகிறது. பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. தற்போது கேரளாவில் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், தெலுங்கு பட வில்லன் தேவேந்தர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். குருதேவ் ஒளிப் பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்