சினிமா செய்திகள்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது

தெலுங்கில் ஸ்ரேயா, நடித்துள்ள ‘காயத்ரி’ படம் படம் திரைக்கு வந்த நாளில் இணையதளங்களிலும் வெளியாகி விட்டது.

தினத்தந்தி

தெலுங்கில் ஸ்ரேயா, மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையதளங்களிலும் வெளியாகி விட்டது. ஒரு இணையதளத்தில் 2 லட்சம் பேரும், இன்னொரு தளத்தில் 75 ஆயிரம் பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படத்தை தயாரித்துள்ள நடிகர் மோகன்பாபு கூறியதாவது:-

நான் கஷ்டப்பட்டு காயத்ரி படத்தை தயாரித்தேன். கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 8 மாதம் படத்துக்காக உழைத்தேன். ஆனால் படம் திரைக்கு வந்த அன்றே இணையதளத்தில் வெளியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. எந்த தியேட்டரில் இதை திருட்டுத்தனமாக பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.

இந்த படத்தை நான் வியாபாரம் செய்துவிட்டேன். ஆனாலும் இணையதளத்தில் வெளியானதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

இவ்வாறு மோகன்பாபு கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்