சினிமா செய்திகள்

'எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை அவர்தான்'... ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்

ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ’ஆகாசம் லோ ஒக தாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகை ஸ்ருதிஹாசன், தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவிதான் என்று தெரிவித்துள்ளார்.

பிடித்த தமிழ் நடிகை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் 'ஆஸ்க் மீ எனிதிங்' (Ask Me Anything) அமர்வில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசனிடம், "எல்லா காலத்திலும் உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை யார்?" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், "எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை ஸ்ரீதேவி" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி, 1967-ம் ஆண்டு வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து ’துணைவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இந்தி திரையுலகிலும் தனது முத்திரையை பதித்த ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

புதிய படம்

இதற்கிடையில், ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ’ஆகாசம் லோ ஒக தாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய கட்ட படப்பிடிப்பில் அவர் சமீபத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்பும் நவீன பெண் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துவருவதாக கூறப்படுகிறது.