சினிமா செய்திகள்

'சில்லுனு ஒரு காதல்' இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

சூர்யா நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். ஏ.ஆர் ரகுமான் இசையில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு என பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரிலீசான சமயத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் அதன் பிறகு தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகின்றது. பாடல்கள், காட்சிகள், காமெடி காட்சிகள் என இப்படத்தில் இடம்பெற்ற அனைத்தும் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்திற்கு முன்பு கடைசியாக ஜோடியாக நடித்த படம் என்பதால் சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மேலும் ஸ்பெஷலான படமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கிருஷ்ணா அதன் பிறகு நெடுஞ்சாலை மற்றும் பத்து தல ஆகிய படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் கிருஷ்ணா. இப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

விஜய் டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு லிப்ட், டாடா என வெற்றிப்படங்களாக கொடுத்து வந்த கவினின் நடிப்பில் சமீபத்தில் ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்திருக்கும் கவின் அடுத்ததாக கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகும் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை