சினிமா செய்திகள்

'தேவரா 2 ' -ல் இணையும் தமிழ் நடிகர்...யார் தெரியுமா?

தேவரா 2 படத்தில் ஒரு தமிழ் நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான  படம் 'தேவரா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியைத் தரவில்லை என்றாலும், வசூல் ரீதியாகப் பேசப்பட்டது.

சமீபத்தில், தேவரா வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தேவராவின் 2-ம் பாக அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தேவரா 2 இன் ஸ்கிரிப்ட்டில் கொரட்டலா சிவா பல மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேவரா 2 படத்தில் ஒரு தமிழ் நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நடிகர் வேறு யாருமல்ல, கோலிவுட் நட்சத்திர நடிகர் சிம்புதான். கொரட்டலா அவருக்காக ஒரு சிறப்பு வேடத்தை வடிவமைத்துள்ளதாகவும், ஜான்வி கபூருடன் தேவரா 2 படத்தில் மற்றொரு கதாநாயகி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்