நடிகர் சிம்புவுக்கு தமிழ் இலக்கியா என்ற தங்கையும், குறளரசன் என்ற தம்பியும் இருக்கிறார்கள். தமிழ் இலக்கியாவுக்கு திருமணமாகி விட்டது. அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் ஐதராபாத்தில் வசிக்கிறார். தம்பி குறளரசன், சிம்புவின் சில படங்களில் தலையை காட்டியிருக்கிறார். சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்து இருந்தார். தொடர்ந்து சில படங்களில் இசையமைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.