சினிமா செய்திகள்

"பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை - மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாகவும், மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களுடைய ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று எஸ்.பி.பி மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு