சினிமா செய்திகள்

கொரோனா தொற்று பாதித்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று பாதித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மராட்டியத்திற்கு அடுத்து தமிழகம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அவற்றில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோன்று திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

அதில், கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை மையத்தில் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் நலம் பெற வேண்டும் என விரும்பிய மற்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது