சினிமா செய்திகள்

சூரி படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷனுடன் இணைந்து `கொட்டுக்காளி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அன்ன பென் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை `கூழாங்கல்' படத்தின் மூலம் சர்வதேச கவனம் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்கிறார்.

சிவகார்த்திகேயன் கூறும்போது, ``ஒரு படைப்பாளி, தனது சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கி தந்து அது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவது விலைமதிப்பற்ற தருணம். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் `கூழாங்கல்' படத்துக்கு டைகர் விருது வென்ற பி.எஸ்.வினோத்ராஜ் திறமையானவர்.

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது உற்சாகமான விஷயம். அன்ன பென் போன்ற திறமையான நடிகை எங்கள் படத்தில் இருப்பது மகிழ்ச்சி'' என்றார். ஒளிப்பதிவு: சக்தி.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...