திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்திய பின்னர் அவர்கள் அனைவரும் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு ‘செல்பி’ எடுத்தனர்.
சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், “எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நிறைய கஷ்டங்களையும், போராட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அதை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிற்கிறது. அடுத்து நடிக்கும் புதிய படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.