சினிமா செய்திகள்

'தி வாரியர்' படத்தின் டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் 'தி வாரியர்' படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் 'தி வாரியர்'. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார்.

"தி வாரியர்" திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'தி வாரியர்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து